மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.! பள்ளிகளுக்கு அதிரடியாக பறந்த முக்கிய உத்தரவு

First Published | Dec 27, 2024, 7:27 AM IST

தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

School Student

பள்ளி தேர்வுகள்

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் என்பது முக்கியமானது. தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே மாணவர்களின் திறமை கண்டறியப்படும். மேலும் அடுத்த அடுத்த  வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதற்கும் தேர்வு மதிப்பெண்கள் முக்கியமானது. அந்த வகையில்  8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வானது முக்கியமானது.

இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாணவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். குறிப்பாக விஷேச நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள்.
 

school exam

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

வஇதனால் மாணவர்களின் மனநிலை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஓய்வே இல்லாமல் படிப்பதால் சோர்ந்து போகும் சூழ்நிலை உருவாகும் எனவே அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இருந்த போதும் ஒரு சில தனியார் பள்ளிகள் மற்ற பள்ளிகளோடு போட்டியின் காரணமாக சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக புகார்கள் தற்போது எழுந்துள்ளது. இதனையடுத்து  தனியார் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

Tap to resize

school student

பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாரர் மொஹைதீன் அப்துல் காதர் என்பவரின் இரு மகள்கள் ஆயிஷா ஷாஜனா மற்றும் அனபா இர்னாஸ் ஆகியோரை சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகைப்புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜூப்ளி பள்ளியில் பயில அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது சார்ந்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

special class

சிறப்பு வகுப்புகளுக்கு தடை

இவ்வழக்கு சார்ந்து, பள்ளி நிர்வாகத்தால், சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை என மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு 02.07.2024 அன்று மேல்நடவடிக்கை இன்றி முடித்துவைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு(தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

click me!