திமுக ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் முடிந்து விட்டன. நான்கு ஆண்டுகள் முடிய போகிறது. ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர். இனியும் தாமதம் செய்யாமல், அரசின் கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் தான் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக, 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினிஅறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் என மொத்தம் 12,000 பேர் தற்காலிக அடிப்படையில் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.