ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா! சிக்கிய 200 வீடியோக்கள்! வேறு யாருக்காவது தொடர்பா?

First Published | Dec 26, 2024, 5:06 PM IST

Camera in Dressing Room in Rameswaram: ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் செல்போன்களில் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

Ramanathaswamy Temple

புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜைகள் செய்து, பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை நாட்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையின் போது பல லட்சம் பேர் குவிவார்கள். 

Rameswaram Dressing Room

இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் புனித நீராட ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அதன் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறைக்கு ஈர துணியை மாற்ற சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: அதிமுக எடுத்த அதிரடி முடிவு! ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்!

Tap to resize

police Arrest

அப்போது உடை மாற்றும் அறை பாதுகாப்பாக உள்ளதா என்று சுற்றிப் பார்த்த போது டைல்ஸ் சுவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். ஆன்லைனில் வாங்கி மேகராவை பொருத்திய டீக்கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், அவரது நண்பர் மியான் மைதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க:  பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

Hidden Camera

இதனைத்தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகியோரின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட  ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோர் வணிக நோக்கங்களுக்காக இந்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றியுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ரகசிய கேமிராக்கள்  5 மாதத்திற்கு முன்பே  3 ரகசிய கேமராக்கள் வாங்கி தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளனர். 

Latest Videos

click me!