இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிச் சென்றது.
வெங்காயத்தின் விலை 120 ரூபாயை தாண்டிச்சென்றது. போட்டி போட்டு தக்காளி, வெங்காயம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராக்கெட் வேகத்தில் தக்காளி சென்றதால் வீடுகளில் சமைக்கும் உணவுகளில் தக்காளி வெங்காயத்தை குறைவான அளவை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. மேலும் மழை காரணமாகும் தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்தது.