அடித்தது ஜாக்பாட்.! கல்லூரி மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

First Published | Dec 27, 2024, 8:13 AM IST

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண் கல்வியை ஊக்குவிப்பதோடு, சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது.

college student

மாணவிகளுக்கு மாதம் உதவி தொகை

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, இலவச பேருந்து, காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதனையடுத்து உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திருமண உதவித்திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்  திட்டமே புதுமைப்பெண் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

college student

புதுமைப்பெண் திட்டம்

2022- 23 கல்வி ஆண்டு முதல் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதுமைபெண் திட்டத்தின் கீழ் பெண்கள் உயர் கல்வி பெறுகிறார்கள், குழந்தை திருமணம் தடுக்கப்படுகிறது, குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவி அளிக்கப்படுகிறது.

மேலும் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறைக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்  உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

Tap to resize

college student

யாருக்கெல்லாம் உதவி தொகை

உயர் கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகிறது. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை கல்வி பயின்ற பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற இயலும்.

puthumai pen thittam

மாணவிகளுக்கு உதவிடும் 1000 ரூபாய்

இந்த திட்டத்தில் இணைய தகுதி வாய்ந்த மாணவிகள் என்பதை பள்ளி அளவிலேயே "EMIS" என்ற இணையதளம் மூலம் மாணவிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் யார் தகுதி வாய்ந்தவர் என்பது முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையின் மூலம் மாணவிகள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். 

pudhumai penn scheme student login

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்

இந்த நிலையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கிவைக்கவுள்ளார். இது தொடர்பாக வெளியாகிவுள்ள அறிவிப்பில், அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதியன்று தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!