Tamilnadu Power Cut: மே 22ம் தேதி.! கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

Published : May 21, 2026, 07:14 AM IST

Power Shutdown: தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (22-05-2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் முக்கிய இடங்களின் பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

PREV
14
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யும் நேரத்தில் ஊழியர்கள் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

24
நாளை தினம் மின்தடை செய்யப்படும் இடங்கள்

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதுமட்டுமல்ல அவரவர் செல்போனுக்கு மின்சார வாரியம் தரப்பில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்படி நாளை தினம் (22-05-2026) தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

34
கோவை

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

44
ஈரோடு

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories