Pongal Celebration
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 6 முதல் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூர்களுக்கு ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு நாளை இரவு முதல் சென்னை திரும்பவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Special Train
சிறப்பு ரயில் அறிவிப்பு
இருந்த போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் மக்களுக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. (ரயில் எண் 06168) இந்த ரயிலானது ஜனவரி 19ஆம் தேதி மாலை 4:25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 3:45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து அடைகிறது.
train ticket
தூத்துக்குடி டூ சென்னை
இந்த ரயிலில் 7 ஏசி வகுப்பு பெட்டிகளும், 6 முன்பதிவு செய்த பெட்டிகளும், ஒன்று பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடி கோவில்பட்டி திருமங்கலம் மதுரை, திண்டுக்கல் திருச்சி அரியலூர் விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (15.1.2025) காலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Train Ticket
மதுரை டூ சென்னை
இதே போல சென்னைக்கும் - மதுரைக்கும் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மெமு வகை ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், இந்த ரயில் ஜனவரி 15ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படும் எனவும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு சிறப்புரயிலானது (ரயில் எண் 06061/06062) ஜனவரி 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்தும், 19ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கும் மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.