ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த சீதாலட்சுமி

Published : Jan 14, 2025, 09:16 AM ISTUpdated : Jan 14, 2025, 09:30 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, தேமுதிக, பாஜக போட்டியிடவில்லை.

PREV
15
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த சீதாலட்சுமி
evks elangovan

ஈரோடு கிழக்கு - எம்எல்ஏக்கள் மரணம்

2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா,  தொகுதி பணிகளிலும் சட்டப்பேரவை நிகழ்விகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருமகன் ஈவேரா மரணத்தால் காலியான தொகுதியில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
 

25
Erode

இடைத்தேர்தல் அறிவிப்பு

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் படி டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் படி பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

35

புறக்கணித்த அரசியல் கட்சிகள்

இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென அதிமுக, தேமுதிக, பாஜக அறிவித்துள்ளது. தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறாது என்ற காரணத்தால் போட்டியிடவில்லையென அறிவித்தது. இதன் காரணமாக திமுகவிற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் இறங்கவுள்ளது.  அந்த வகையில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டப் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளது. 

45
erode by election

நாம் தமிழர் வேட்பாளர் யார்.?

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

55

யார் இந்த சிவகாமி.?

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories