பல்கலை வளாகத்தில் மாணவிக்கு மீண்டும் பாலியல் கொடுமை.! வெளியான அதிர்ச்சி தகவல்

First Published | Jan 14, 2025, 8:53 AM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும் வடமாநில மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Anna University sexual assault case

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான எப்ஐஆரில் மாணவியின் முழுவிவரம் மற்றும் வாக்குமூலம் வெளியானது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் அந்த மாணவியின் வாக்குமூலத்தில் ஞானசேகரன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த சமயத்தில் யாரோ ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்திருந்தார்.

யார் அந்த சார்.?

மேலும் சார் ஒருவருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து யார் அந்த சார்.? என எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் வட மாநில மாணவிக்கு பாலியல் தொந்தரவு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக இயங்கி வருகிறது.

Tap to resize

file photo

புதுச்சேரி பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை

இங்கு இளநிலை முதுநிலை படிப்பில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு வட மாநில மாணவி தனது ஆண் நண்பரோடு தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் மாணவி மற்றும் அந்த பையனை மிரட்டியுள்ளனர். மேலும் அந்த மாணவியின் நண்பனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மாணவிக்கு அந்த 3 பேரும் பாலியல் தொந்ததரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.  

puducherry government

போலீசார் விசாரணை

இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார் அப்போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. மேலும் சத்தம் போட்டும் மாணவி கத்தியுள்ளார். இதனால் மர்ம நபர்கள் 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க பயந்த மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பல்கலைகழகம் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்ற நபர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

Latest Videos

click me!