ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம் விலை.! கிடு கிடுவென உயர்ந்த காய்கறிகள்- ஒரு கிலோ இவ்வளவா.?

First Published | Jan 14, 2025, 7:22 AM IST

சமீபத்தில் குறைந்த தக்காளி, வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக காய்கறி விலை உயர்வு அதிகரித்துள்ளது.

tomato onion

உயரும் காய்கறிகளின் விலை

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல கடந்த சில மாதங்களாக ஏழை மற்றும் எளிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தது. ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு விலை உயர்ந்தது.

tomato onion

குறைந்தது விளைச்சல்

இதன் காரணமாக தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவிலே தக்காளியையும், வெங்காயத்தையும் வாங்கினார்கள். கன மழையின் காரணமாக பெரிய அளவில் விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்தும் குறைந்தது.

இது தான் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு மானிய விலையில் விற்பனையை தொடங்கியது.

Tap to resize

tomato onion

விலையை குறைக்க நடவடிக்கை

இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத நிலை நீடித்தது. தக்காளி, வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்தால் தான் விலை குறையும் என கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்ட நிலையில் விற்பனைக்கு ஒரே நாளில் அதிகளவு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை சரிவை சந்தித்தது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் சந்தோஷத்தில் 5 கிலோ 10 கிலோ என பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.

Vegetables

சென்னையில் இன்றைய காய்கறி விலை

இந்தநிலையில் தக்காளி விலை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் படி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் என அதிகரித்துள்ளது. இதே போல வெங்காயத்தின் விலையும் கடந்த சில வாரங்களாக குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் தேவை அதிகரித்தால் விற்பனை விலையானது உயர்ந்துள்ளது. 

Vegetables

கேரட் விலை என்ன.?

அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 க்கும், காலிபிளவர் ஒன்று 35 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

Vegetables Price Koyembedu

பீன்ஸ் விலை என்ன.?

வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,

பீர்க்கங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!