ஜனவரி 18ஆம் தேதியும் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Jan 13, 2025, 06:04 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஜனவரி 17ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 18ஆம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

PREV
15
ஜனவரி 18ஆம் தேதியும் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
pongal 2025

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. அதை விட கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது.

இதனால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறையானது கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 18ஆம் தேதியும் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

25
Pongal Celebration

கூடுதல் விடுமுறை

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக 14.01.2025 முதல் 16.01.2025 வரை தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் 17.01.2025 அன்று வெள்ளிகிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை பெறப்பட்டதின் அடிப்படையில் அக்கோரிக்கைகளை ஏற்று. முதல்மைச்சர் மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,

35
school holiday

25ஆம் தேதி பணி நாள்

17.01.2025 (வெள்ளிகிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்திரவிட்பட்டுள்ளது. 

45
Register Office holiday

ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை

எனவே. மேலே குறிப்பிட்டுள்ளபடி 17.01.2025 வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் 18.01.2025 அன்று சனிகிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு 18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான 20.01.2025 அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

55
Register Office

கூடுதல் முன்பதிவு வில்லைகள்

இதனை ஏற்று, 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories