நாளை வெளுத்து வாங்கப்போகுது கன மழை.! தென் மாவட்டங்களுக்கு குறி- வானிலை மையம் அலர்ட்

First Published | Jan 13, 2025, 2:27 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்யும். இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாளை தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (13-01-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Puducherry Rain

தென் மாவட்டங்களில் மழை

நாளை பொங்கல் தினத்தில் (14-01-2025) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதனையடுத்து ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தென் தமிழகம், கடலோர தமிழகத்தில், வட தமிழகத்திலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Puducherry Rains

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

இன்று (13-01-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (14-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில்
பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tamil Nadu Rains

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

13-01-2025 முதல் 16-01-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Latest Videos

click me!