ஆசிரியர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை; ஜனவரி 23ஆம் தேதி தான் லாஸ்ட்.!

First Published | Jan 13, 2025, 9:19 AM IST

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினிமயமாக்கல், மடிக்கணினிகள், கைக்கணினிகள் வழங்கப்பட்டு, மணற்கேணி செயலி மூலம் QR code வழி பாட வீடியோக்கள் மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

school teacher

கல்விக்கு முக்கியத்துவம்

கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதம் ஆகும். அந்த வகையில் கல்வி கற்க பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லாத நிலையில் தற்போது அதிகளவு பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஆண்டு தோறும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இடை நிற்றலும் குறைந்துள்ளது. இந்த நிலையில் நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி கற்பித்தல்  முறையும் மாறி மாறி வருகிறது. அதற்கு ஏற்ப ஆசிரியர்களும் புதிய கல்வி கற்கும் முறை தொடர்பாக அவ்வப்போது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

school teacher

ஸ்மார்ட் வகுப்புகள்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் மடிக்கணினிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும், திறன் வகுப்பறைகளின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இத்தகைய கணினி சார்ந்த புதிய அறிவியல் நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரியும் வகையில் மணற்கேணி செயலி வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

Tap to resize

school student

மணற்கேணி செயலி

இந்த Quick Response Code-QR Code மூலம் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பாடப்பொருளுக்கு ஏற்றவாறு மாநில பாடத்திட்ட புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கான வீடியோ காட்சிகளின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதை 21.01.2025ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Manarkeni app

23ஆம் தேதி கடைசி நாள்

மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள்  மற்றும் ஆசிரியர்களை வருகிற ஜனவரி 23ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Manarkeni app

பெற்றோர்களுக்கும் மணற்கேணி செயலி

மேலும்  பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி தொடர்பான  விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போனிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் அச்செயலி வழியாக பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி கற்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!