Pongal Celebration
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது தமிழகம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14,15, மற்றும் 16 ஆகிய தேதிகளில் இயற்கை அன்னைக்கு மரியாதை செய்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்வார்கள். அதன் படி இந்தாண்டு பொங்கல் பண்டிகை பொதுமக்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எந்தாண்டும் இல்லாத வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 முதல் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
PONGAL BUS
தொடர் விடுமுறை
இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை சந்தோஷசத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களோடு பொங்கலை கொண்டாட புறப்பட்டு வருகிறார்கள் அதன் படி ரயில்களில் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமும் வட மாவட்டம், தென் மாவட்டம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பயணம் செய்து வருகிறார்கள்.
pongal festivel
சிறப்பு ரயில், பேருந்து இயக்கம்
மேலும் தனியார் பேருந்துகளான ஆம்னி பேருந்துகளிலும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் தமிழக அரசு சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. அதன் படி நேற்று மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வரை எத்தனை பயணிகள் அரசு பேருந்தில் மூலம் வெளியூர் பயணம் செய்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
koyambedu BUS
சிறப்பு பேருந்தில் பயணம்
போக்குவரத்து துறை, அதன் படி பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (12/01/2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,858 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3950 பேருந்துகளில் 2,17,250 பயணிகள் பயணம்செய்தனர் . கடந்த 10/01/2025 முதல் 12/01/2025 இரவு 24.00 மணி வரை 11,463 பேருந்துகளில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.40 லட்சம் பேர் பயணம்
கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 6.40 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல ரயில், ஆம்னி பேருந்துகள், கார்களிலும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைந்து நெரிசல் இல்லாத நிலை உள்ளது.