Chidambaram Temple
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
School Holiday
அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆகையால் அன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
ramanathapuram
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு 2025ம் ஆண்டு நாளை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும்.
Pongal Holidays
ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறை மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.