மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மகளின் செல்போனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகராக உள்ள எம்.எஸ்.ஷாவிடம் இருந்து ஆபாசமான உரையாடல்கள் மற்றும் ஆபாச படங்கள் வந்திருந்தாக கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக தனது மகளிடம் விசாரித்த போது தனது தாய் தன்னை பள்ளிக்கு செல்ல விடாமல் பாஜக பிரமுகரிடம் அழைத்து சென்று தனிமையில் ஒன்றாக இருக்க வைத்ததாக கூறியிருந்தார். மேலும் ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துசென்று பாஜக நிர்வாகி தன்னை பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.