சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி முடக்கம்: தமிழக காவல்துறை தகவல்

Published : Jan 13, 2025, 10:19 PM ISTUpdated : Jan 13, 2025, 10:27 PM IST

TN Police on Cybercrime cases: 2024ல் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ரூ.772 கோடி பணத்தை முடக்கியுள்ளனர். 34,392 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 838 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சைபர் விழிப்புணர்வுக்காக சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெறும்.

PREV
15
சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி முடக்கம்: தமிழக காவல்துறை தகவல்
Cybercrime cases

2024ஆம் ஆண்டில் சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளனது. இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

25
TN Police

2024-ம் ஆண்டு 'சைபர் கிரைம்' உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 875 அழைப்புகள் வந்தது. இதில் நிதிமோசடி குறித்து 34 ஆயிரத்து 392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் மோசடி சம்பவங்களில் மக்கள் இழந்த ரூ.1,673.85 கோடியில் ரூ.771.98 கோடி முடக்கப்பட்டது.

35
Cybercrime Report

இதில் ரூ.83.34 கோடி பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 34 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19,359 போலி சிம்கார்டுகள், 54 போலி இணையதளங்கள் உள்பட பல மோசடி தளங்கள் முடக்கப்பட்டன.

45
Cybercrime Walkathon

ஆபரேஷன் "திரை நீக்கு" நடவடிக்கை மூலம் கடந்த டிசம்பர் 6 முதல் 8-ந்தேதி வரையில் தமிழகத்தில் 76 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும் வருகிற 29-ந்தேதி சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

55
Cybercrime Awareness

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வி.பி.சிங் சிலையில் இருந்து போர் நினைவிடம் வரை சைபர் வாக்கத்தான் நடைபெறும்"

இவ்வாறு தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories