கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வரும் நிலையில், தனது கணவருக்கு லாக்கப் டெத் போன்ற சூழல் ஏற்பட்டுவிடுமோ என அவரது மனைவி ராணி அச்சம்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அதாவது 27ம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் யாரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை விரைவில் சந்தித்த மன்னிப்பு கேட்டு ரூ.20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்
கரூர் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸ் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது.
34
போலீஸ் விசாரணை
அதாவது காவல்துறை எச்சரிக்கையையும் மீறி நிபந்தனைகளை கடைப்பிடிக்காதது குறித்தும் கூடுதல் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரிடம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் வாக்குமூலத்தை பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் மனைவி ராணி கண்ணீர் மல்க பேட்டியளிக்கையில்: எனது கணவரை கைது செய்த போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி தானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். என் கணவர் மீது சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு. அஜித் குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர் என தெரிவித்துள்ளார்.