நீயா நானா.? இபிஎஸ் உடன் முற்றியது மோதல்.! செங்கோட்டையன் வீடு முன் போலீசார் செய்த சம்பவம்

Published : Feb 12, 2025, 07:25 AM ISTUpdated : Feb 12, 2025, 07:26 AM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். எடப்பாடிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதா படம் இல்லாததால் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் இரு தரப்பிலும் மோதல் முற்றியுள்ளது.

PREV
14
நீயா நானா.? இபிஎஸ் உடன் முற்றியது மோதல்.! செங்கோட்டையன் வீடு முன் போலீசார் செய்த சம்பவம்
இபிஎஸ் உடன் முற்றியது மோதல்.! செங்கோட்டையன் வீடு முன் போலீசார் செய்த சம்பவம்

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல் இன்னமும் குறையவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனியாக பிரிந்துள்ளனர்.  இதன் காரணமாக ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தேர்தலில் வாக்குகள் பிரிந்து எதிர் தரப்பினர் ஈசியாக வெற்றிபெறும் நிலை உருவாகிவிடுகிறது. எனவே எப்போது அனைத்து தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என காத்திருக்கும் நிலையில், தற்போது மற்றோரு மூத்த தலைவர் போர்கொடி தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24
இபிஎஸ்க்கு பாராட்டு விழா

ஜெயலலிதாவின் வலது கரமாக இருந்தவர் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், அவர் தான் தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். அன்னூரில் நேற்று முன்தினம்  நடைபெற்ற அவினாசி அத்திகடவு திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லை என  முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருந்தனர்.
 

34
புறக்கணித்த செங்கோட்டையன்

இதனையடுத்து  நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டங்களுக்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் ஜெயலலிதா என கூறினார். எனவே அவரை மறைத்து எடப்பாடிக்கு மட்டும் பேனர் வைத்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்தார்.  

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  டெல்லியில் நடைபெற்ற அதிமுக தலைமை அலுவலக நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் சென்னை மற்றும் டெல்லியில் கலந்து கொண்ட நிலையில் அதிலும் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் புறக்கணித்து இருந்தார்.

44
செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இதனால் இரு தரப்பில் மோதல் முற்றியது. இதனால் இபிஎஸ் தரப்பினர் ஏதேனும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடலாம் என்ற தகவலின் அடிப்படையில் செங்கோட்டையன் வீட்டிற்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு தலைமை காவலர்கள் உட்பட நான்கு பேர் குள்ளம்பாளையம்  பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories