விஜய் கட்சியில் உருவாகும் 28 அணிகள்! குழந்தைகள் முதல் திருநங்கைகள் வரை லிஸ்ட் ரெடி!

Published : Feb 12, 2025, 12:30 AM IST

TVK Party 28 Wings: தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி, மூன்றாம் பாலினத்தவர் அணி உள்பட 28 வகையான அணிகள் உருவாக்கப்பட உள்ளன. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் நியமனத்தைத் தொடர்ந்து இந்த அணிகளுக்கும் நிர்வாகிகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

PREV
16
விஜய் கட்சியில் உருவாகும் 28 அணிகள்! குழந்தைகள் முதல் திருநங்கைகள் வரை லிஸ்ட் ரெடி!
TVK wings list

தமிழக வெற்றி கழகத்தில் குழந்தைகள் அணி, மூன்றாம் பாலினத்தவர் அணி உள்பட 28 வகையான அணிகள் உருவாக்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

26
TVK Leader Vijay

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கி, அடுத்த சில மாதங்களில் முதல் நாட்டையும் நடத்தி முடித்தார். அதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் நியமனம் ஆகியவை படிப்படியாக நடைபெற்று வருகின்றன.

36
TVK Flag

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களமிறங்க உள்ளதால், வரும் மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை குறித்துக் கேட்டறிவார் என்று சொல்லப்படுகிறது.

46
TVK Vijay Update

ஏற்கனவே தவெகவில் தேர்தல் வியூகங்களை வகுக்க ஜான் ஆரோக்கியராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் பிரசாந்த் கிஷோரும் சேர்ந்துள்ளனர். ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் விஜயைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் மறுநாள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தவெக குறித்த தனது அறிக்கையையும் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

56
TVK wings news

இந்நிலையில் விஜய் கட்சியில் பல்வேறு தரப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அணிகள் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க.வுடன் 28 சார்பு அணிகள் அமைக்கப்பட உள்ளன என்று சொல்லப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, ஊடக அணி, கொள்கை பரப்பு மற்றும் பேச்சாளர் அணி, பயிற்சி மற்றும் தொண்டர்கள் முன்னேற்ற அணி, உறுப்பினர் சேர்க்கை அணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அணி, வரலாற்று தரவு ஆய்வு மற்றும் உண்மை சரிபார்ப்பு அணி, திருநங்கைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, இளம் பெண்கள் அணி, குழந்தைகள் அணி, தொண்டர்கள் அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, உழைப்பாளர் அணி, தொழில் முனைவோர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் அணி, மருத்துவர் அணி,விவசாய அணி, கலை இலக்கியம் பண்பாட்டு அணி, தொண்டர்கள் அணி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அணி ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

66
TVK cadres

வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் அணி அமைப்பது புதுசாக இருக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகள் அணியும் லிஸ்டில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் நியமனத்தைத் தொடர்ந்து இந்த அணிகளுக்கும் நிர்வாகிகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

Read more Photos on
click me!

Recommended Stories