Published : Feb 11, 2025, 08:07 PM ISTUpdated : Feb 11, 2025, 08:12 PM IST
Vijay and Prashant Kishor: தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் த.வெ.க. வாக்குகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர். விஜய் மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது தொடர்பான தனது அறிக்கையை தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் அவர் வழங்கி இருக்கிறார்.
26
Vijay and Prashant Kishor
அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்துக் கொடுப்பவராக பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். அவர் திங்கட்கிழமை சென்னையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடந்ததியிருக்கிறார். நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்துள்ளது.
36
Vijay and Prashant Kishor
இந்நிலையில் இன்று பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தனது ஆய்வறிக்கையை வழங்கியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் தவெகவுக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் த.வெ.க. வாக்குகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
46
Vijay and Prashant Kishor
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் தவெகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் எடுத்துக் கூறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையை விஜய் கைக்குச் சென்றதும் அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் தேர்தல் அணுகுமுறை குறித்து மீண்டும் ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது.
56
தவெக கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு
வரும் மார்ச் மாதத்தில் இருந்து விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பூத் வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்யும் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
66
MK stalin and Vijay
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கட்சி தொடங்கிய பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தேர்தல் வியூகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.