எதிர்பாராத ட்விஸ்ட்.. பனையூர் பக்கமாக வண்டியை திருப்பும் ராமதாஸ்.. நடந்தது என்ன? குஷியில் விஜய்

Published : Jan 27, 2026, 01:32 PM IST

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாத நிலையில், ராமதாஸ் தரப்பு தற்போது நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதலை அடுத்து இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். யாருக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கும் என்று தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

24

இந்நிலையில் ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ராமதாஸ் அணியை கூட்டணியில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. இதனால், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதேபோல் அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்ததால் அந்த கூட்டணிக்கு செல்ல ராமதாஸ் போக வாய்ப்பில்லை. மேலும் அதிமுக கூட்டணியில் சேர்க்க கூடாது அன்புமணி ஏற்கனவே கூறிவிட்டார்.

34

திமுக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் கூட்டணி சேர முடியாத நிலை உருவாகியுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் செங்கோட்டையன் மூலம் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தவெக கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்பதால் சோகத்தில் இருந்து வந்த நிலையில் ராமதாஸ் வருவகையால் விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

44

இந்த சூழலில் தான் ராமதாஸ் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, நல்லது நடக்கட்டும் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories