எந்த கட்சியுடன் கூட்டணி? பாமக பொதுக்குழுவில் வெளிப்படையாக பேசிய ராமதாஸ்! தொண்டர்கள் குஷி!

Published : Aug 17, 2025, 03:04 PM IST

பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ் தேர்தல் கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

PREV
14
PMK Founder Ramadoss' Speech On Election Alliance

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிக்குள் தங்களுக்கும் தேவையான ஆதரவாளர்களை சேர்த்தும், தேவையில்லாத ஆதரவாளர்களை நீக்கியும் அறிவிப்பு வெளியிட்ட இருவரும் இப்போது போட்டி போட்டு பொதுக்குழுவை நடத்தியுள்ளனர்.

24
ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம்

அன்புமணி ராமதாஸ் தரப்பு சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அப்போது அன்புமணி தான் பாமகவின் தலைவர் என அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறப்பட்டது. இந்நிலையில், அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் தரப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் தான். கட்சியில் அவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணிக்கு பதில் ராமதாஸின் மூத்த மகள்

மேலும் தேர்தல் படிவத்தில் ராமதாஸ் தான் கையெழுத்திடுவார். தேர்தல் கூட்டணி குறித்து அவர்தான் முடிவு எடுப்பார். பாமகவில் மற்ற யாரும் தேர்தல் கூட்டணியோ அல்லது பேச்சுவார்த்தையோ நடக்கக் கூடாது க‌ட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும் அதிகாரம் இனி டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே உண்டு. அன்புமணி வெளியிட்ட நியமனங்கள் செல்லாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அன்புமணியின் இடத்தில் ராமதாஸின் மூத்த மகள் உட்கார வைக்கப்பட்டு இருந்தது அரசியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.

34
தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் பேச்சு

இதனைத் தொடர்ந்து பாமக பொதுக்குழுவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ராமதாஸ் கூறுகையில், ''இது வரலாற்று சிறப்புமிக்க கூட்டம். இது காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் தொண்டர்க்ள் நீங்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்காகவும் நான் பாடுபட்டேன். இனிமேலும் பாடுபடுவேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ராமதாஸ் என்ன சொல்கிறார் என உற்றுநோக்குகின்றனர். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாட்டிற்கான தீர்மானங்கள்'' என்றார்.

எந்த கட்சியுடன் கூட்டணி?

தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், ''எந்த கூட்டணிக்கு சென்றால் வெற்றி கிடைக்கும் என தொண்டர்கள் காத்திருக்கின்றனர். நீங்கள் (தொண்டர்கள்) எனக்கு கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும், அவர்கள் விரும்பும் நல்ல கூட்டணி அமையும். நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்துவேன். நான் காட்டும் வழியில் வாருங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்'' என்று தெரிவித்தார்.

44
ஸ்டாலின் நினைத்தால் இடஒதுக்கீடு கிடைக்கும்

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து பேசிய ராமதாஸ், ''அனைத்து சமூகத்தினருக்கும் சேர்த்து தான் சாதிவாவாரி கணக்கெடுப்பு கேட்டு போராடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என தமிழக அரசு தட்டிக்கழிக்கிறது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் (மு.க.ஸ்டாலின்) பேசினேன். 

முதல்வர் நினைத்தால் உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை போராடுவதை விடப்போவதில்லை. இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படும். பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக ரசு நிறைவேற்றித் தர வேண்டும்'' என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories