நூலிழையில் தப்பிய இபிஎஸ்..! அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் பரபரப்பு

Published : Aug 16, 2025, 07:26 PM IST

திருவண்ணாமலையில் பிரச்சார பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேருந்தின் அருகே பிரம்மாண்ட வரவேற்பு ஆர்ச் சரிந்து விழுந்தது. நூலிழையில் எடப்பாடியின் வாகனம் தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

PREV
13
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 7-ம் தேதி தனது பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். 

இந்த பிரச்சார பயணத்தின் போது திமுக ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துரைத்துக்கும் வகையில் பேசி வருகிறார். மேலும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, காவல் நிலைய மரணங்கள், டாஸ்மாக் ஊழல், போதைப்பொருள் கலாச்சாரம், மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் போன்றவற்றை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

23
திமுகவிற்கு எதிராக இபிஎஸ் பிரச்சாரம்

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய கொங்கு மண்டல மாவட்டங்களில் தொடங்கியது. அடுத்ததாக விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அடுத்ததாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பயணத்தை முடித்த அவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.

33
கீழே விழுந்து வரவேற்பு ஆர்ச்

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனது பிரச்சார பேருந்து மூலம் பயணம் செய்தார். தனது வாகனத்திற்கு முன்பாகவும், பின்னாடியும 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பின் தொடர்ந்தது. ஒரு இடத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பிரம்மாண்ட ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது. 

அந்த ஆர்ச்சை எடப்பாடி பழனிசாமியின் பேருந்து கடக்க முற்பட்ட போது திடீரென அந்த ஆர்ச் சரிந்து சாலையில் விழுந்தது. நூலிழையில் எடப்பாடியின் வாகனம் தப்பியது. எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை தொடர்ந்து வந்த மற்ற வாகனங்கள் மீது விழுந்தது. இதனால் அந்த இடமே பரபரப்பானது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கார்களின் மீது விழுந்த ஆர்ச் அகற்றப்பட்ட பிறகு மற்ற வாகனங்கள் செல்ல தொடங்கியது.

Read more Photos on
click me!

Recommended Stories