அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.! ஐயாவிற்கு எதிராக சீறிய பாமக பாலு

Published : Sep 11, 2025, 01:50 PM IST

பாமகவில் தந்தை மகன் இடையேயான அதிகார மோதல் காரணமாக அன்புமணி ராமதாஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என அன்புமணி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

PREV
14
பாமகவில் தந்தை - மகன் மோதல்

பாமகவில் தந்தை மகன் இடையேயான அதிகார மோதல் காரணமாக இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் கூறி விளக்கம் அளிக்க ராமதாஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டு முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தும் உரிய பதில் அளிக்கவில்லை. 

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி விளக்கம் அளிக்காத காரணத்தால் அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கருப்படுகிறது. எனவே அன்புமணி செயல் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். செயல் தலைவர் மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என தெரிவித்தார்.

24
அன்புமணியை நீக்கிய ராமதாஸ்

மேலும் அன்புமணியுடன், பாமக.வில் இருப்பவர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைக்கும் பட்சத்தில் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு,

கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு கட்சி பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்படவில்லை. பதவி நீக்கம், கூட்டம் நடத்துவது என எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இன்று மருத்துவர் ஐயா வெளியிட்டுள்ள அறிவிப்பு விதிகளுக்கு எதிரானது. பாமகவை எந்த வித அறிவிப்பும் கட்டுப்படுத்தாது என தெரிவித்தார்.

34
ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை- வழக்கறிஞர் பாலு

அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கட்சி தேர்தல் நடத்த உரிய சூழல் இல்லை என கூறி தலைவர், செயலாளர், பொருள்ளாளர் உள்ளிட்ட 3 பேரின் பதவி காலம் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுரவப்பட்டது. 

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவித்தோம். எங்களது மனுவை விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆய்வு செய்து பாமக தலைவர் 3 பேரின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு 2026 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

44
ராமதாசுக்கு நீக்க அதிகாரம் இல்லை- பாலு

இதை தவிர நான் தான் தலைவர், நான் தான் செயலாளர், நான் தான் பொருளாளர் என வெளியிடக்கூடிய அறிவிப்பு கட்சியின் விதியின் படியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும் எதிரானது. கட்சியின் நிறுவனராக மட்டும் ராமதாஸ் தொடர்கிறார். மற்ற நிர்வாகிகளுக்கு கட்சி பொறுப்புகள் மாற்றப்பட்டதாக வெளியிட்ட அறிவிப்பு தவறானது என கூறினார். 

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி மூலம் அன்புமணி ஒட்டுக்கேட்டதாக வெளியான தகவலை மறுத்த பாலு உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என பாலு தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories