திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. தமிழகம் வரும் வழியில் பிரதமர் மோடி போட்ட பரபரப்பு பதிவு

Published : Jan 23, 2026, 10:23 AM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், ஊழல் திமுக அரசுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

PREV
13
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது..

முன்னதாக கேராள மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அம்ரித் பாரத் ரயில் உட்பட பல முக்கிய சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தமிழகம் வருவதற்கு முன்பாக தனது சமூக வலைதளத்தில் திமுக ஆட்சி தொடர்பாக கருத்து தெரவித்துள்ள பிரதமர் மோடி, “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

33
திமுக அரசுக்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது..!

மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories