சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,60,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் ஏற்றம் இறக்க கண்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் ரூ.3000 முதல் 4000 வரை உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1,720 குறைந்த நிலையில் இன்று ரூ.3,600 உயர்ந்துள்ளது.
24
தடுமாறும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650 விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3600 உயர்ந்து, முதன்முறையாக ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய நிலையில், தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
34
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை யாரும் எதிர்பாராத விதமாக ஒரே நாளில் ரூ.20,000 அதிகரித்து, ரூ.3,60,000-க்கு விற்பனையாகிறது.
உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவை தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.