பழனி கோயில் பங்குனி உத்திர விழா.! பக்தர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு

Published : Apr 08, 2025, 02:13 PM IST

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

PREV
14
பழனி கோயில் பங்குனி உத்திர விழா.! பக்தர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு

 Palani Murugan Temple Panguni Uthiramrchariot work in full swing : தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகளவில் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. அந்த வகையில்  முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். இந்த கோயிலில் சிறப்பு விஷேச நாட்களான சஷ்டி விரதம், தைப்பூசம், சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் கூட்டம் அலைமோதும்.

24

பழனி கோயில் திருவிழா

மேலும் நேத்திக்கடனாக பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் முருகனை வேண்டி பால்குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இந்த விழாவில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 

34
palani murugan temple

பழனி கோயில் தேரோட்டம்

தினந்தோறும் தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை, சுவாமி தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்ரதர்களுக்கு ஆசி வழங்கப்படும்.

இந்த நிலையில் இந்த விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 11ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் (வௌ்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபடுவார்கள். இந்த தேரோட்டம் பழனி மலையை சுற்றி உள்ள வீதிகளில் நடைபெறவுள்ளது. 

44
Palani Murugan Temple

தேரோட்டம் ஏற்பாடு தீவிரம்

இதனையடுத்து தேரோட்டத்திற்காக தேரே  தயார்படுத்தும் பணி தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் சாலைகளில் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் வருகிறது. மேலும் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாட்டையும் பழனி கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories