வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு மட்டுமல்ல இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி! முதல்வர் ஸ்டாலின்!

Published : Apr 08, 2025, 01:57 PM ISTUpdated : Apr 08, 2025, 02:12 PM IST

தமிழக ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சரியல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
15
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு மட்டுமல்ல இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி! முதல்வர் ஸ்டாலின்!
Governor RN Ravi

ஆளுநர் ஆர்.என். ரவியின் எதிரான வழக்கு

தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இம்மனுவின் மீதான அனைத்து தரப்பு விசாரணை நிறைவடைந்த  நிலையில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

25
Supreme Court

ஆளுநர் தன்னிச்சையாக செயல்படி முடியாது

அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக செயல்படி முடியாது. அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை. மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும். 10 மசோதாக்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு 200ன் கீழ் ஆளுநரின் முடிவு என்பது நீநிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஆளுநர் எதிராக வழக்கு! ஆர்.என்.ரவி தன்னிச்சையாக செயல்பட முடியாது! ஒரே போடு போட்ட சுப்ரீம் கோர்ட்!

35
tamilnadu assembly CM Stalin Speech

முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றிய உரையில்: பேரவைத் தலைவர் அவர்களே, அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சற்றுமுன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.  இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார்.  அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். 

45
Tamil Nadu

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

இரண்டாவது முறை சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்டமுன்வடிவுகளை  ஆளுநர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும் தெரிவித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.  

இதையும் படிங்க: ஆளுநர் ரவி கிடப்பில் போட்ட 10 மசோதாக்கள்.! உச்சநீதிமன்றம் ஒப்புதல்- என்னென்ன சட்ட மசோதா தெரியுமா.?

55
RN Ravi Vs CM Stalin

அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories