காவி உடை அணிந்து வராமல், கருப்பு சட்டையில் வந்ததே மகிழ்ச்சி.! எடப்பாடியை கிண்டல் செய்த ஸ்டாலின்

Published : Apr 08, 2025, 01:38 PM IST

டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் கருப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவினரை விமர்சித்தார், 

PREV
15
காவி உடை அணிந்து வராமல், கருப்பு சட்டையில் வந்ததே மகிழ்ச்சி.! எடப்பாடியை கிண்டல் செய்த ஸ்டாலின்

ADMK MLAs wear black shirts : டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை 1000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்ததையடுத்து, அதிமுக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டசபைக்கு அதிமுக உறுப்பினர்கள் அந்த தியாகி யார் என்ற பேட்ஜ் உடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பதாகையையும் அதிமுக எம்எல்ஏக்கள் காண்பித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரை கூட்டத்தில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார்.

25
admk eps

கருப்பு சட்டையில் அதிமுக எம்எல்ஏக்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.  இன்று காலை வினாக்கள் விடைகள் நேரத்திற்கு பின், பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மக்களின் பிரச்சனையை எடுத்து சொல்ல வேண்டியது கடமை.

அதன்படி அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பில் பேசும்போது, நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எங்களை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்றும், இப்படி ஒரு தலைப்பட்சமாக ஏன் இந்த அவை செயல்படுகிறது? இதை நாங்கள் யாரிடம் முறையிடுவது என கேள்வி எழுப்பினார். 

35

அதிமுகவினர் பேச்சு புறக்கணிப்பு

இதற்கு பதில் அளித்த சபாநாயகர், தவறான வார்த்தைகள் பதிவானால் எதிர்மறை பிரச்சினைகள் வரும். கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் யாரையும் இதுவரை புறக்கணித்ததாக புகார் எழவில்லை. முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் போது, அது முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் உறுப்பினர் கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் போது, முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சொன்னதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 4 ஆண்டு காலம் தான் முடிந்துள்ளது. இன்னும் ஓராண்டு காலம் உள்ளது என சபாநாயகர் கூறினார். 

45
Stalin Vs EPS

நல்லவேளை காவி உடையில் வரவில்லை

ஆனால் இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  சபாநாயகர் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

எதிர்க்கட்சித்து உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் வந்துள்ளனர். கருப்பு சட்டை அணிந்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவேளை காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்துள்ளனர் என தெரிவித்தார்.

55
ADMK MLAs wear black shirts

வெள்ளைக்குடை வேந்தர்தான் தமிழ்நாட்டு முதல்வர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் 9 மாதங்கள் தான் திமுக-வின் ஆட்சிக்கான காலம்; அகம்பாவத்தில் ஆடுகிறார்கள். காவி உடை அணிந்து வரவில்லை என்று எங்களை விமர்சிக்கிறார்; அவருக்கு பேச தகுதி உள்ளதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டவர்கள்.  ஆளுங்கட்சி என்றால் வெள்ளைக்குடை வேந்தர்தான் தமிழ்நாட்டு முதல்வர் என விமர்சித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories