வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெறலாம்.

Unemployment Youths Scholarship! Ramanathapuram District Collector tvk
Tamilnadu Youth

படித்த இளைஞர்களுக்கு சூப்பர் திட்டம்

தமிழக அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அசத்தலான சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் படித்து முடித்து வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு அரசு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

Unemployment Youths Scholarship! Ramanathapuram District Collector tvk
Scholarship

மாதம் உதவித்தொகை

2019ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வழங்கப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வட்டி முழுமையாக தள்ளுபடி.! தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு


ramanathapuram district collector

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு (பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

District Employment Office

விதிமுறைகள்

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. 

Unemployment Youths Scholarship

உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் முறை

மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நோில் சென்று, அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவாியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முடியாது. எனவே, தகுதியான விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

vuukle one pixel image
click me!