ஆண்களுக்கும் பேருந்தில் இலவசமாக விடியல் பயணம் திட்டம்.! தமிழக அரசு முக்கிய தகவல்

Published : Apr 08, 2025, 11:20 AM ISTUpdated : Apr 08, 2025, 02:21 PM IST

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

PREV
14
ஆண்களுக்கும் பேருந்தில் இலவசமாக விடியல் பயணம் திட்டம்.! தமிழக அரசு முக்கிய தகவல்

Tamilnadu Government Vidiyal Payanam scheme தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக  தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து ஆட்சியை பிடித்த திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் மகளிர்களுக்கான இலவச பேருந்து பயண திட்டமான விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணத்தின் மூலம் சுமார் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.

24
tamilnadu Government bus

இலவசமாக பேருந்தில் பயணம்

எனவே இந்த திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் எந்த வித கட்டணமும் இன்றி சாதாரன பேருந்துகளில் பயணிக்க முடியும். எனவே இந்த திட்டத்தை பெண்கள் மட்டும் பயனடையும் வகையில் இல்லாமல் ஆண்களும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசும் பதில் அளித்துள்ளது. 

34
Vidiyal Payanam scheme

ஆண்களுக்கு விடியல் பயணம்

இந்த நிலையில்  தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்காக தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும்  விடியல் பயண திட்டத்தில்  ஆண்களுக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் வகையில் விடியல் பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார். 

44
Free bus travel scheme for men

ஆண்களுக்கு விடியல் பயணம் பரிசீலனை

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக பதில் அளித்தார்.  மேலும், ஆண்களுக்கு இலவச பயணம் திட்டம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரின் ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.

இதனால் பெரியார் கொள்கைகளுக்கு ஏற்ப பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது.  எனவே அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பதில் அளித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories