Tamilnadu Heat Wave : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை எம்எல்ஏக்கள் கேள்விகளாக முன்வைத்தனர். இதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 12 - 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து அரசியல் கட்சி சார்பாக நீர் மோர் கொடுக்கப்பட்டு வருகிறது.
கொளுத்தும் வெயில் - தப்பிப்பது எப்படி.?
எனவே வெப்பத்தில் இருந்து மக்கள், மாணவர்களை பாதுக்காக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், மழை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டது போல் தற்போது வெயில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.வெயில் வரும் போது நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
எனவே அதற்கு தேவையான யுக்திகளை அரசாங்கள் அறிவுறுத்தியுள்ளது. எ இதனால் போதுமான வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.
ஓகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்டம்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியை சுற்றி வெளிவட்ட சாலை அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த முன்னூரிமை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிட உள்ளோம். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.
Hogenakkal
ஓகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் எப்போது தொடங்கும்
இதனை தொடர்ந்து பேசிய அவர், ஓகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 8000 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கு ஜெய்கா நிதி உதவி பெற்ற உடன் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரையில் 2023ம் ஆண்டு தான் 130 எம்எல்டி கொடுக்க வேண்டும். ஆனால் தற்போதே 130 எம்எல்டி தண்ணீர் கிடைத்து தண்ணீர் போதவில்லை. இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.