Palani Murugan Temple: பழனி தண்டாயுதபாani சுவாமி கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை ரோப்கார் சேவை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தலாம்.
உலக பிரசித்தி பெற்ற கோவிலும், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பக்தர்கள் வருகின்றனர்.
24
பக்தர்கள்
பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
34
ரோப்கார் சேவை பராமரிப்பு பணி
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான காரணம் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்லவே அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை வெள்ளிக்கிழமை ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் ரோப்கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.