சொத்து பதிவு செய்யப்போறீங்களா.!! 20ஆயிரத்திற்கு மேல் இருந்தால் வீடு தேடி வரும் IT - வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Aug 05, 2025, 08:17 AM IST

சொத்து பதிவின் போது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக பரிமாறப்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத பதிவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

PREV
15
வீடு வாங்க திட்டமிடும் மக்கள்

ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் கனவாக இருப்பது சொந்த வீடு, ஏதாவது இடத்தில் சிறிய வீடு கட்சி சொந்தாக நமக்கு என வீடு இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. இதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தில் நிலமோ, வீடோ வாங்குவார்கள். அதே நேரம் ஒரு சில தொழிலதிபர்கள் கணக்கில் வராத பணத்தில் மூலமாக சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். 

எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. அந்த வகையில் சொத்துப்பதிவின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிமாறப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25
20ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பணம்

கடந்த 2015 ம்ஆண்டு நிதிதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சொத்து பரிமாற்றத்தின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டது.

இதுகுறித்து, அப்போதே, அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் சொத்து விற்பனையில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரொக்கப்பரிமாற்றம் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

35
வருமான வரித்துறைக்கு தகவல்

இந்த நிலையில் ரொக்க பணம் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது புதிய உத்தரவை பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு பிறப்பித்துள்ளார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொாக்கப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45
பத்திர பதிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை

எனவே பதிவுக்கு வரும் ஆவணத்தில் ரொக்கப்பரிமாற்றம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதை பதிவு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப்பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இடம்பெற்றிருந்தால்,

 இது தொடர்பான தகவல்களை ஆவணத்தின் நகலுடன் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தகவல் அளிக்கப்பட்டதற்கான அறிக்கை, ஆவணத்தின் நகல் ஆகியவற்றை இணைப்பு பக்கமாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

55
பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

ஒரு வேளை பதிவு அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தாலோ அல்லது ரொக்கப்பணம் தொடர்பாக தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியது தெரிந்தால், மாவட்ட பதிவாளர்கள் அதுகுறித்த அறிக்கையை மண்டல துணை பதிவாளர்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 எனவே பதிவு அலுவலர்கள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்கள் உரிய அறிவுறுத்தல்களை பதிவு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories