பி.எட். மாணவர்களுக்கு குட்நியூஸ்! இனி இப்படியும் கல்லூரியை தேர்வு செய்யலாம்! அமைச்சரின் சரவெடி அறிவிப்பு!

Published : Aug 05, 2025, 08:10 AM IST

2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பக் கல்லூரிகளை www.lwiase.ac.in என்ற இணையதளம் மூலம் தேர்வு செய்யலாம்.

PREV
14

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்) மாணாக்கர் சேர்க்கை விருப்பப்பாடங்கள் மற்றும் கல்லூரிக்கான இணைய வழியில் மாணாக்கர் தேர்வு செய்யலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

24

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால் வெளி ஊர்களில் இருந்து மாணாக்கர்க்ள தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப் போக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

34

அதன்படி, விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன. 557 ஆண்கள் 2983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர் 31.07.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன.

44

இணைய வழியில் 04.08.2025 பிற்பகல் 1.00 மணி முதல் 09.08.2025 மாலை 5.00 வரை மாணாக்கர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories