திமுகவில் இணைந்த கையோடு மதுரையில் மார்ச் 7ம் தேதி தரமான சம்பவம் செய்யப்போகும் ஓபிஎஸ்.. குஷியில் முதல்வர் ஸ்டாலின்!

Published : Mar 04, 2026, 04:32 PM IST

DMK OPS: தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியின் அனைத்து தரப்பட்ட மக்களையும் அரவணைத்து கொள்ளக்கூடிய சூழல் உள்ளது. மனப்பூர்வமாக இணையும் விழாவானது 7 தேதி நடைபெற உள்ளது.

PREV
14
மதுரையில் இணைப்பு விழா நிகழ்ச்சி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் பல்வேறு இயக்கங்களில் இருந்து முதலமைச்சர் தலைமையில் கழகத்தின் இணையும் நிகழ்ச்சி மதுரை திருமங்கலம் அருகே ராயபாளையம் பகுதியில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் மூர்த்தி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

24
என்னை தாய் அன்புடன் வரவேற்ற திமுக

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்:- அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் முதலமைச்சராக உள்ளார். என்னை தாய் அன்புடன் வரவேற்று கழகத்தின் நினைத்து நன்றி வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நிகழ்வுக்கு முன்நின்று தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிற அமைச்சரும் மூர்த்தி‌ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஐந்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அடித்தளத்தில் வாழும் மக்களுக்கு தேவைகளை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் என்ற சிறப்பான ஆட்சியை முதலமைச்சர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

34
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்

இந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்றுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் பகுபாடின்றி தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் தேர்தல் வருகின்ற சூழ்நிலையில் எந்த சூழ்நிலையிலும் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என அனைத்து தர மக்களும் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். 7ம் தேதி இணைப்பு விழா நடைபெற உள்ளது. அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 70, 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்லசூழல் உள்ளது.

44
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைவார்கள்

தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியின் அனைத்து தரப்பட்ட மக்களையும் அரவணைத்து கொள்ளக்கூடிய சூழல் உள்ளது. மனப்பூர்வமாக இணையும் விழாவானது 7 தேதி நடைபெற உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories