எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார்.!- ஓபிஎஸ் அறிவிப்பு

Published : Feb 13, 2025, 03:07 PM ISTUpdated : Feb 13, 2025, 03:41 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பஞ்சமி நிலம் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். தனக்குத் தெரியாமல் பஞ்சமி நிலத்தை வாங்கியதாகவும், பின்னர் அதை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

PREV
14
எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார்.!-  ஓபிஎஸ் அறிவிப்பு
எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார்.!- ஓபிஎஸ் அறிவிப்பு

பஞ்சமி நிலத்தை தனது பெயரில் வாங்கியது தொடர்பாக புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பஞ்சமி நிலம் வாங்கியதாக எந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஓபிஎஸ், தேனி அல்லிநகரத்தில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரின் பூர்விக நிலம் எந்தவித வகைபடுத்தாமல் இருந்தது. பின் 1984 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை ஏழை,எளிய மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறினார். 

24
பஞ்சமி நிலம் திருப்பி கொடுத்துவிட்டேன்

கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்புராஜ் என்பவரிடம் இருந்து நான் நிலத்தை வாங்கியதாகாகவும்,  அது பஞ்சமி நிலம் என்று தெரிய வந்ததால் நிலம் வாங்கிய 7வது மாதத்தில் எனக்கு விற்பனை செய்த நபருக்கு மீண்டும் அந்த நிலத்தை எழுதிக் கொடுத்து விட்டேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக என்ற இயக்கத்தை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக உயிரை கொடுத்து காப்பாற்றிய இயக்கம். எனவே  கட்சியின் விதிமுறைகள் படி உறுப்பினர்கள் மூலமாகத்தான்  பொதுச்செயலாளர் தேர்வு செய்ய முடியும்.

34
நிபந்தனை இன்றி இணைய தயார்

எனவே இந்த விதியை யாராலும் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியை திருத்தம் செய்தார். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், வழி மொழி வேண்டும் என திருத்தம் கொண்டு வந்தார்கள். அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம் என கூறினார். 

நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ளது என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என கூறினார்.

44
அத்திக்கடவு அவிநாசி திட்டம்

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு என தெரிவித்தவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால் தான் அனைவருக்கும் நல்லது என கூறினார். 

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் நிதியின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததாகவும், நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன் நின்று நடத்தியுள்ளதாகவும், எனவே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories