வெயிட் அண்ட் சீ..! இபிஎஸ் குறித்த கேள்விக்கு ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்..! அப்போ அதுதானா?

Published : Sep 10, 2025, 04:39 PM IST

அதிமுக‌வின் இபிஎஸ் குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
அதிமுகவில் உட்கட்சி பூசல்

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெரும் உட்கட்சி பூசலில் தவித்து வருகிறது. ஒருபக்கம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். மறுபக்கம் இபிஎஸ் அணியில் இருந்த செங்கோட்டையனும் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்காக பாஜகவின் அமித்ஷாவையும் சந்தித்து பேசி வந்து விட்டார்.

24
அதிமுக ஒன்றிணைய வேண்டும்

இந்நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைய காத்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அது எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் அதை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவரின் மனதிலும் இருக்கிறது. அப்போது தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் ஈடேறும்'' என்று தெரிவித்தார்.

நிபந்தனை விதிக்காத ஓபிஎஸ்

இந்த கருத்தில் எடப்பாடி பழனிசாமி மாறுபடுகிறாரே? உங்களுக்கும் அவருக்கும் என்னதான் பிரச்சனை என செய்தியாளர் கேட்டபோது, ''நீங்கள் அவரிடமே (எடப்பாடி) கேளுங்கள்'' என்று ஓபிஎஸ் பதிலளித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற டிடிவி தினகரனின் கருத்தை நல்ல கருத்து என ஓபிஎஸ் கூறினார். மேலும் பேசிய ஓபிஎஸ் நான் கட்சியில் அனைவரும் ஒன்றிணைவதற்காக எந்த வித நிபந்தனையும் வைக்கவில்லை என்றார்.

34
எடப்பாடியை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்

அப்போது அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா? என்று செய்தியாளர் கேட்டபோது, ''பல பிரச்சனைகளை பேச வேண்டியதுள்ளது. 6 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அந்த வழக்குகள் தர்மயுத்தத்தில் அடிப்படை கூறுகளாகும். அது நிறைவேறும் விதத்தில் நாங்கள் யோசனை செய்வோம்'' என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

44
செங்கோட்டையனுக்கு பாராட்டு

தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் எடுத்த முயற்சியை பாராட்டிய ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றார். மேலும் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய வரும் தேர்தல் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர் கேட்டபோது, ''உடனுக்குடன் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கேட்டால் எப்படி சொல்வது? பொறுத்திருந்து பாருங்கள் தேர்தல் வர வர உங்கள் எண்ணம் நிறைவேறும்'' என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.

திமுகவா? அல்லது தவெகவா?

ஓபிஎஸ் பேட்டியை பார்க்கும்போது, அதிமுக ஒன்றிணைந்தாலும் இபிஎஸ் தலைமையை அவர் விரும்பவில்லை என்பது தெரியவருகிறது. அப்படி இபிஎஸ் அவரை சேர்த்துக் கொள்ளாவவிட்டால் திமுக அல்லது விஜய்யின் தவெக பக்கம் அவர் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories