ஊட்டிக்கு போறீங்களா.! பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள் எது தெரியுமா.?

Published : Mar 02, 2026, 02:48 PM IST

Ooty: வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்து கொள்ள சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில் நீலகிரியில் பார்க்க வேண்டிய டாப் 10 சுற்றுலா தளங்கள். 

PREV
18
நீலகிரியல் குவியும் சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மே மாதம் போல பிப்ரவரி மாதத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்து கொள்ளவும், அழகிய மலைகள், நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் குளிர்ச்சியான காலநிலை, பனிபோர்வை போன்ற புல்வெளிகள், ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேராளவை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில் நீலகிரியில் பார்க்க வேண்டிய டாப் 10 சுற்றுலா தளங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

28
ஊட்டி மலை ரயில்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அது ஊட்டி மலை ரயில் பயணம். ஊட்டிக்கு செல்பவர்கள் ஒருமுறையாவது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயற்கை அழகை ரசித்த படி செல்வதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் மலை ரயில் சேவையை தேர்வு செய்கின்றனர். மலைகளில் நடுவே வளைந்து செல்லும் அழகே தனி. குகைகளில் செல்லும் போது மக்கள் மகிழ்ச்சியில் எழுப்பும் கூச்சல் அழகானது

38
ஊட்டி ஏரியில் படகு சவாரி

ஊட்டி ஏரியின் அழகை ரசிக்கவே கண்கள் போதாது. அந்தளவிற்கு இயற்கையோடு கலந்திருக்கும். 65 ஏக்கர் பரப்பளவில் அழகே வடிவாய் அமைந்திருக்கிறது ஊட்டி ஏரி. இங்கிருக்கும் படகு இல்லம் பிரபலமானது. இங்கே படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அடுத்ததாக குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவாக சில்ட்ரன்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களும், விளையாட்டு சாதனங்களும் உள்ளது.

48
தாவரவியல் பூங்கா

பொட்டானிக்கல் கார்டன் என அழைக்கப்படும் தாவரவியல் பூங்காவனது பரந்து விரிந்த புள்வெளியை கொண்டதாகும், இங்கு வண்ண வண்ண மலர்களும், மூலிகைகளும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும்மெய் சிலிர்க்க வைக்கும். போட்டோ ஷூட் எடுக்க முக்கிய பகுதியாகவும் உள்ளது.

58
முதுமலை வனவிலங்கு காப்பகம்

முதுமலை வனவிலங்கு காப்பகமானது கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். இங்கு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், பறக்கும் அணில் போன்ற பல்வேறு வகையான விலங்குகள் ஏராளமாக உள்ளது.

68
பைகாரா அருவி

பைகாரா அருவி மற்றும் படகு சவாரியாகும் கூடலூர் செல்லும் சாலையில் இந்த பைக்காரா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி புது அனுபவத்தை கொடுக்கும்.

78
தொட்டபெட்டா

மிக உயரமான மலையாகும், தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாக உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2623 மீட்டர் உயராகும். இங்கு மேகங்கள் உரசி செல்லும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

88
எமரால்டு ஏரியின் அழகு

சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த ரோஜா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏமாரால்டு ஏரி மற்றும் அவலாஞ்சி போன்ற இடங்களும் மக்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகை கொண்டதாகும். இந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது ஓடும் ஆறுகளும் பள்ளத்தாகும் மிக அழகாக இருக்கும். ரோஜா பூங்காவில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜாக்கள் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories