இப்போது வெயில் இப்படி என்றால் கோடை காலத்தில் எப்படி இருக்குமோ என்று அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அலறுகின்றனர். இப்போது வெயில் இப்படி என்றால் கோடை காலத்தில் எப்படி இருக்குமோ என்று அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக 15 நாட்கள் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
35
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 3 முதல் 5 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 6ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 7ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.
55
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.