திமுகவுடன் பேரம் பேசும் கட்சி விசிக இல்லை..! புதுவையிலும் தொகுதிகள் வேண்டும் திருமா திட்டவட்டம்

Published : Mar 02, 2026, 01:45 PM IST

திமுகவுடன் பேரம் பேசும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கிடையாது. எங்களது பலத்திற்கு ஏற்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PREV
15
திமுக - விசிக பேச்சுவார்த்தை

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தையை, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், மற்றும் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

25
2026 வழக்கமான தேர்தல் கிடையாது..

இந்த பேச்சுவார்த்தை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “திமுகவுடன் தொகுதி பேச்சு வார்த்தையில் இன்று ஈடுபட்டோம். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வழக்கமான சராசரியான பொது தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் வலது சாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வோடு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்ற அக்கறையோடு, இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அங்கம் என்கின்ற, உரிமை உணர்வோடு, எங்கள் கருத்துக்களை இந்த கூட்டத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்டோம்.

35
பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல

நாங்கள் திமுகவோடு ஒரு பேரம் பேசும் கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றி சமூக நீதி அரசியலுக்கான வெற்றி, என்ற புரிதலோடு எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து, எங்கள் கருத்துக்களை மனம் உவந்து கேட்டுக் கொண்டார்கள்.

45
புதுவையில் 3 தொகுதிகள்

பேச்சுவார்த்தை சுமூகமான, சிறப்பான முறையில் அரங்கேறியுள்ளது. பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் இல்லை. பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்று நாங்கள் பேசவில்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு என்பது, எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம். பாண்டிச்சேரியிலும் ஒரு பொது தொகுதி, 2 தனி தொகுதி வேண்டும் என்று கோரியுள்ளோம்.

55
வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது

கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடி வித்தை எடுபடாது. மோடி எத்தனைமுறை தமிழகம் வந்து, திமுகவுக்கு எதிரான களங்கத்தை பூச நினைத்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் அது நடக்காது. தமிழ்நாடு என்பது வேறு, மற்ற மாநிலங்கள் வேறு. இங்கே மதவாத, சாதியவாத அரசியலுக்கு இடம் இல்லை. வெருப்பு அரசியலை எப்போதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தேவை உள்ளது.

Negotiation'ஐ வெளியில் சொல்ல முடியாது. அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இன்றும் நாங்கள் உறுதியாக உள்ளோம் ஆனால் அரசியல் சூழல் அதற்கு ஏற்றார்போல் கனிய வில்லை. எங்களது தொகுதி எண்ணிக்கையைத்தான் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் கேட்டுள்ளோம்” என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories