சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன் (TTF வாசன்). இவர் பைக் ரைடிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆனார். இதன் காரணமாக இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
கடந்தாண்டு பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் டிடிஎஃப் வாசன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மற்றொரு சம்பவத்தில் சிக்கியுள்ளார் டிடிஎஃப் வாசன். நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த பிரபல யூட்டியூபர் டிடிஎஃப் வாசன் ஹில்பங்க் என்னும் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை நிறுத்த முற்பட்ட போது நிற்காமல் சென்றுள்ளார்.