மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு.. இவர்களுக்கு பொருந்தாது - முழு விபரம்

First Published Jun 14, 2023, 12:16 AM IST

மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் முழு விபரத்தை இங்கு காணலாம்.

சென்னையில் பெருகும் வாகனம் நெரிசலை குறைக்கும் விதமாகவும் மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் இதனை கட்டுப்படுத்த முடியும் என கடந்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இரண்டு வழித்தடங்களில் இங்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சென்னை வாசிகள் இந்த சேவை தினமும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சென்னையில் 2 வழித்தடங்களில் இதனை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 116. 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை அமைய இருக்கிறது.

மேலும் 43 கிலோமீட்டர் அளவுக்கு சுரங்க பாதைகளும், 48 ரயில் நிலையங்களும் ஏற்படுத்தப்படஉள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ. 10-ம் 12 மணி நேரம் வரை ரூ. 15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதல் (ஜூன் 14) பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு உயர்த்துவதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 6 மணி நேரம் வரை ரூ. 20 ஆகவும், 12 மணி நேரம் வரை ரூ. 30 ஆகவும், 12 மணி நேரத்திற்கு மேல் ரூ. 40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாதாந்திர கட்டணமாக 6 மணி நேரத்துக்கு 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், 12 மணி நேரத்துக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு பழைய கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

click me!