மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! உள்ளே நுழைந்த போலீஸ்! அரைகுறை ஆடைகளுடன் 3 பெண்கள் செய்த காரியம்.!

First Published | Jun 8, 2023, 11:09 AM IST

திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய வட மாநில பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்வப்போது விபச்சாரம் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு  மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

Tap to resize

அப்போது, தமிழகத்தை சேர்ந்த 3 இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரைகுறை ஆடைகளுடன் இருந்த மூன்று இளம்பெண்களை மீட்டனர்.

இதனையடுத்து, மசாஜ் சென்டர் உரிமையாளரான மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நீரு (39) என்ற பெண்ணை கைது செய்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா! ரூ.500 இருந்தா போதும்! உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்

Latest Videos

click me!