குறைந்த கட்டணம்.. இனிமே ரயில் நிலையத்தில் தான் வெட்டிங் போட்டோஷூட் - எங்க தெரியுமா?

Published : Jun 09, 2023, 08:08 PM IST

ரயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுமணத் தம்பதிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
குறைந்த கட்டணம்.. இனிமே ரயில் நிலையத்தில் தான் வெட்டிங் போட்டோஷூட் - எங்க தெரியுமா?

டிஜிட்டல் யுகத்தில் போட்டோஷூட்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டு வருகிறது.  திருமணம் செய்து பார் என்ற பழமொழி இன்று நவீன காலத்துக்கு ஏற்றவாறு பல விதமாக கூறப்படுகிறது. ஆனால், இன்று திருமணத்திற்கு முன், பின் அரங்கேற்றப்படும் போட்டோஷூட்டுகளின் செலவு தான் மிக அதிகம்.

24

அந்த அளவிற்கு விதவிதமான போட்டோஷூட் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர் புதுமண தம்பதியினர். திருமணமாகவிருக்கும் தம்பதிகள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியான நாளின் நினைவுகளை உருவாக்க புதுமையான பல விஷயங்களை முயற்சி செய்கிறார்கள்.

34

தங்கள் திருமணத்திற்கு முந்தையை போட்டோஷூட்டை சிலர் வைரல் பாடல்களுக்கு நடனமாடியும், மற்றவர்கள் வெளிநாடுகள் அல்லது சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்தும் மகிழ்கின்றனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது மதுரை ரயில்வே நிர்வாகம்.

44

மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ரூ.5,000 செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரயில் முன் நின்று புகைப்படம் எடுக்க கூடுதலாகர் ரூ.1,500 செலுத்த வேண்டும் என்றும் மதுரை ரயில் நிலைய மேலாளர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Read more Photos on
click me!

Recommended Stories