ஊட்டிக்கு டூர் போறீங்களா.! சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஷாக் செய்தி

First Published | Nov 4, 2024, 8:07 AM IST

தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கு ஏமாற்றம். கல்லார் - குன்னூர் இடையே நிலச்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து.

சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் இருந்தாலும் பொதுமக்கள் அதிகம் விரும்பி செல்லக்கூடிய இடங்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களாகும். அந்த வகையில் இயற்கையை அனுபவிக்க மலைப்பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். குளுமையான வானிலையை ரசிக்க செல்வார்கள் அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்தனர்.

குறிப்பாக ஊட்டிக்கு மட்டும் கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் பேர் சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். அங்கு அடர்ந்த காடுகள், பசுமை நிறைந்த புல்வெளிகளும், தூய்மையக சில்லென்று வீசும் காற்றும் சுற்றுலா பயணிகளை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லும்.

ஊட்டியில் சுற்றுலா இடங்கள்

அந்த வகையில் உதகையில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஊட்டி ஏரி மிகவும் பிரபலமானது.  இங்கு படகு சவாரி செய்வது மக்களுக்கு அலாதியான இன்பத்தை கொடுக்கும், அடுத்ததாக சில்ட்ரன்ஸ் பார்க் உள்ளது. குழந்தைகள் விளையாடும் வகையில் படகு சவாரி, குதிரை சவாரி போன்றவை இடம்பெற்றிருக்கும். புல்வெளியின் வண்ண வண்ண மலர்களும் அழகாக அமைந்துள்ள தாவரவியல் பூங்காவாகும்,

 இந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ சிறந்த இடமாகவும் உள்ளது.  அடுத்தாக மலைத்தொடரிலே உயரமான மலைத்தொடராக தொட்டப்பெட்டா உள்ளது. 2,623 மீட்டர் உயரமான சிகரங்களில் ஒன்றாகும், எமரால்டு ஏரி, அவலாஞ்சி, முதுமலை வனவிலங்கு காப்பகம், ரோஸ் கார்டன், பைகாரா அருவி போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய இடமாகும். 

Tap to resize

ஊட்டி மலை ரயில்

பல சுற்றுலா இடங்கள் ஊட்டியில் இருந்தாலும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்பதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில் மலைகளில் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளிலும், குகைகளில் செல்லும் ரயில் பயணம் மிகவும் பிரபலமான ஒன்றாகும், வெளிநாட்டு பயணிகள் அதிகம் விரும்பும் பயணங்களில் இதுவும் ஒன்றாகும். அந்த வகையில் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்ட பயணிகளுக்கு தற்போது சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

மலை ரயில் சேவை ரத்து

அந்த வகையில்  கல்லார் - குன்னூர் ரயில் நிலையங்களிடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையேயான ரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலை ரயில் பயணம் செய்ய ஆர்வமாக வரும் பயணிகளுக்கு ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.  

ooty train service

ஊட்டியில் கன மழை

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது. பல இடங்களில் நிலர்சரிவு, பாறைகள் கிழே விழும் நிலையும் உள்ளது.  இதனிடையே தொடர் மழை காரணமாக குன்னூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!