நாகை டூ இலங்கை கப்பல் பயண கட்டணம் இவ்வளவு தானா.! வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Nov 4, 2024, 6:56 AM IST

நாகை-இலங்கை இடையேயான 'சிவகங்கை' பயணிகள் கப்பல் சேவை தற்போது வாரத்தில் 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மூன்று நாட்களாக இயக்கப்பட்ட இந்த சேவை, பயணிகளின் வரவேற்பை அடுத்து தற்போது ஐந்து நாட்களாக அதிகரிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

இலங்கைக்கு கப்பல் பயணம்

இலங்கைக்கு வணிகம் மற்றும் சுற்றுலா  போக்குவரத்து பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் சிறிய, சிறிய படகு மூலம் எளிதாக சென்று வரலாம். அதற்கு ஏற்றார் போல் தனுஷ்கோடியில் துறைமுகம் செயல்பட்டு வந்தது. 1967 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. இதனையடுத்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தடைபட்டது. பல ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு நாகையில் இருந்து கப்பல் போக்குவரத்து கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நாகை டூ இலங்கை கப்பல் பயணம்

அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.  செரியாபாணி என்ற கப்பல் இயங்கப்பட்ட நிலையில் உரிய வகையில் கப்பல் சேவை செயல்படாத காரணத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் புயல் மற்றும் வானிலை காரணமாக பயணம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் பயணம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாகை - இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கியது.

Latest Videos


சுற்றுலா பயணிகள் வரவேற்பு

அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் இயக்கப்பட்டது. ஆரம்பத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை நடைபெற்றது. சிவகங்கை கப்பல் சேவை மக்களை கவர்ந்த நிலையில் கப்பல் சேவையானது முதலில் 4 நாட்களாக அதிகரித்தது. தற்போது 5 நாட்களாக அதிகரிகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி , வரும் நவம்பர் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். சிவகங்கை  கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயண கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

இந்த கப்பலில் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 25 கிலோ எடை வரை பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பயணிகள் கப்பல் சேவையை அதிகம் விரும்பி முன்பதிவு செய்த நிலையில் ஆர்வமாக துறைமுகம் வந்த பிறகு கப்பல் சேவையானது ரத்து செய்யப்பட்டது. இதனால் கப்பல் சேவை மீது மக்களுக்கு நம்பிக்கத்தன்மை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது சரியான வகையில் கப்பல் இயக்கப்படுவதால் கடல் மீது பயணம் செய்து இயற்கையை ரசிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 

click me!