பெண்களை சீரழித்த சீமான்! நீங்கள் தான் கூமுட்டை! விஜய் அண்ணனுக்காக ரீ என்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி!

First Published | Nov 3, 2024, 5:26 PM IST

Vijayalakshmi Vs Seeman: நடிகர் விஜய்யை சீமான் கூமுட்டை என விமர்சித்ததற்கு விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீமானின் செயல்களை விஜயலட்சுமி விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி சீரழித்ததாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கே விஜயலட்சுமி சென்றுவிட்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சீமானை கடுமையாக விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வந்தார். 

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கூமுட்டை என தகாத வார்த்தைகளால் விமர்சித்த சீமானை விஜயலட்சுமி அவரை அலறவிட்டுள்ளார். 

Tap to resize

அவர் வெளியிட்ட வீடியோவில்: என்ன மிஸ்டர் சீமான் சாபம்லாம் விடுறீங்க, நேற்று விஜய் அண்ணனுக்கு ஒன்று ரோட்டோட இந்த பக்கம் இரு இல்லாட்டி அந்த பக்கம் இரு. சென்டரில் இருந்தால் லாரி நின்றால் லாரி அடித்து செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு நான் உங்க ரூட்டுக்கே வரேன் அண்ணன் விஜய் ஆகட்டும் இல்ல திமுக ஆகட்டும் கொள்கை ரீதியான தவறு பண்ணியிருக்காங்க. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க. 

சோ கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல. விட்டீங்களே. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்? முதல்ல உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம். அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க.

திமுகவுக்கு என்ன பண்ணணும் என திமுகவுக்கு தெரியும். விஜய் அண்ணனுக்கு என்ன பண்ணணும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். உலகத்திலே நீங்க மட்டும் தான் காலையில் எழுந்து சும்மா பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு, அவங்க அவங்கள சபிச்சிக்கிட்டு  நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள். 

அதனால பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியோ சாபம் எல்லாம் விடாதீர்கள். 24 மணி நேரமும் பெங்களூரில் இருந்து நான்தான் உங்களுக்கு சாபம் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அதனால கொள்கை ரீதியாக தவறு பண்ணவங்களே லாரி அடிச்சா சவாங்கனா நீங்க தமிழ்நாடு மக்கள் செருப்பால் அடித்தே ஒருநாள் சாவிங்க என ஆவேசமாக பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!