Free Bus: இனி டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசமாகவே பயணிக்கலாம்.! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

First Published | Nov 4, 2024, 7:25 AM IST

இலவச பேருந்து சேவைக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் டீலக்ஸ் பேருந்துகளை இலவசப் பேருந்து சேவைக்கு பயன்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

Government Bus

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் உடனடியாக அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச சேவை வழங்கும் திட்டம். இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் பெண்கள், இலவசப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் இலவசப் பேருந்துகள் பிங்க் நிறம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

Government Bus

தற்போது இந்த சேவை அரசு நகரப் பேருந்துகளில் மட்மே வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாத தரவுகளின் அடிப்படையில் 3,376 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை உள்ளது.

Tap to resize

Government Bus

இலவச சேவைக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை முற்றிலும் பழைய பேருந்துகளாக மாறி இயக்கவே முடியாத நிலைக்கு சென்றுவிட்டன. இதனால் அந்த பேருந்துகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள BSVI பேருந்துகளை இலவச பயணத்திற்கு பயன்படுத்தும் திட்டம் உள்ளது. ஆனால் இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர சில காலம் எடுக்கும் என்பதால் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

Government Bus

அதன்படி நெருக்கடியை சமாளிக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில், அதிக கட்டணத்துடன் இயங்கி வரும் சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் சிலவற்றை இலவச பயணத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகரின் 30 பணிமனைகளிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வரும் 700 சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Latest Videos

click me!